கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
வீண் விவாதங்களை விரும்பாத சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.
கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள் :
இந்த மாதம் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான கட்டம். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண முடியும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
சித்திரை 1,2 :
இந்த மாதம் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 21, 22